×

சரியான ‘வாபஸ்’ பழனிசாமி: 11,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு.!!

சென்னை: 11,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து செய்த தமிழக அரசின் முடிவிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை: மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி, நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மூன்று முதன்மை பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020-21-ம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.  

இதற்கு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மாணவர்களின் நலன்கருதி, மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை இரத்து செய்தும்,2020-21-ம் கல்வியாண்டிலிருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர், குளறுபடியானது - ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி என்று பதிவிட்டுள்ளார்.


Tags : MK Stalin ,DMK ,Cancellation ,Palanisamy , Palanisamy: Cancellation of new syllabus for classes 11-12: Welcome to DMK leader MK Stalin !!
× RELATED அதிமுக உறுப்பினர்களை அவையில்...