×

புழல் சிறையில் காவலர்கள் 2 பேருக்கு கொரோனா

புழல்: புழல் மத்திய சிறையில் கடந்த வாரத்தில் ஒரு தூய்மைப்பணியாளர் உள்பட 10 காவலர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டது. ஏற்கனவே 30 கைதிகள் மற்றும் 2 வெளிநாட்டு கைதிகளுக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில், புழல் சிறையில் தண்டனை பிரிவில் 31 வயதான 2 காவலர்களுக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. காவலர் குடியிருப்பு வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர். ஸ்ரீ புள்ளிலைன் பாலாஜி கார்டன் பகுதியில் 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதிக்கு, போரூர் தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் டியூப் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தாய்க்கும், அந்த பச்சிளம் குழந்தைக்கும் நேற்று முன்தினம் கொரோனா உறுதியானது. இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Corona ,guards ,Pulp Jail , Burial Prison, Guards, 2 men, Corona
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் 4 காவலர்கள்...