×

மேலடுக்கு சுழற்சியால் கடலோர மாவட்டங்களில் மழை

சென்னை: வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆ்ய்வு மையம் தெரிவித்துள்ளது.  வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி தற்போது மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதனால் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.  மேலும், வட கடலோர மாவட்டங்கள், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.



Tags : districts , Overlay cycle, coastal, districts, rainfall
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...