×

தலைநகர் டெல்லியில் 91,175 ஆக உயர்ந்த கொரோனா தொற்று பாதிப்பு..: இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழப்பு!

புதுடெல்லி: டெல்லியில் இன்று மேலும் 2373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய நோயாளிகள் உருவாகி வருகின்றனர். இதனால் தலைநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் இன்று மேலும் 2373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 91,175 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 61 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,864 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதேபோன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 63,007 ஆகவும், 26,304 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை காணொலி காட்சி மூலமாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : epidemic ,Delhi ,capital , New Delhi, Corona, dies
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...