×

ஆம்பூர் அருகே காப்புக்காடு வழியாக தலைசுமையாக கடத்தப்படும் ரேஷன் அரிசி, சாராயம்: நடவடிக்கை எடுக்க மறுக்கும் வனத்துறையினர்

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே காப்புக்காடுகளில் அமோகமாக ரேஷன் அரிசி, சாராயம் கடத்தல் நடக்கிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆம்பூர் வன பகுதி வழியாக மாதகடப்பா வனப்பகுதியில்  இருந்தும் அதிகளவில் ஆந்திராவில் இருந்து சாராயம் பாக்கெட்டுகளில் நிரப்பி கடத்தப்படுகின்றன. இதனை மூட்டைகளில் சாராய வியாபாரிகளின் ஆர்டருக்கு தக்கவாறு காப்பு காடுகளின் வழியாக தலை சுமையாக கடத்தி வருகின்றனர்.

இதனை திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், உமராபாத்  பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடப்பாவில் 35 முதல் 50 வரை விலை விற்கப்படும் சாராய பாக்கெட்டுகள், தமிழக பகுதிக்கு கொண்டு வரப்பட்டு 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆம்பூர் வன சரக அலுவலகத்தினர் ரேஷன் அரிசி, கள்ளசாராயம் கடத்துபவர்களை கைது செய்யவில்லை. மதுவிலக்கு மற்றும் உம்ராபாத் போலீசார் மட்டும் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கின்றனர்.எனவே வனத்துறையினரும் சேர்ந்து செயல்பட்டாமல் மட்டுமே கடத்தலை தடுக்க முடியும்’’ என்றனர்.


Tags : Forest officials , Ambur, insulation, smuggling, ration rice, booze, forestry
× RELATED நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை;...