×

தமிழகத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில் விஸ்பரூபம் எடுக்கும் கொரோனா: கிடுகிடுவென உயர்ந்து வரும் பாதிப்பு; விரைவில் 1 லட்சத்தை தொடும் அபாயம்.!!

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் விஸ்பரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94049ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் விஸ்பரூபம் எடுத்து பரவி வருகிறது.  தினமும் 3 ஆராத்திக்கும் அதிகமாக கொரோனா பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 60,533  ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில்,  நாளுக்கு நாள் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 2852 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 52926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 39 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகளவில் நோயாளிகள் குணமடைவதைப்போலவே, மற்றொருபுறம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்  நேற்று வரை 63 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளனர். இதில் அதிகமான நபர்கள் 50க்கும் மேற்பட்ட வயதினை கொண்டவர்கள்தான் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 1264 பேர் இதுவரை கொரோனா காரணமாக  பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 122224 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலும் கொரோனா தொற்று படுவேகமெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையை அடுத்த மதுரையில் மொத்தமாக 2858 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124ஆக  அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5741ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து, வேலூரிலும் இன்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1384ஆக அதிகரித்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Coronation of uncontrollable speeding Risk of touching 1 lakh soon. !!
× RELATED திருமயம் அருகே பைபாஸ் சாலையோரம்...