×

தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு புதிய நிர்வாகிகள்: ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தகவல் தொழில்நுட்பம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள் மற்றும் ஊராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதமும் நியமனம் செய்யப்படுவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. ஆகவே, மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல செயலாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் பணியாற்றி வரும் நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து, கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து மாவட்ட செயலாளர்கள் தலைமை கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : New Administrators for Information Technology Division: OPS ,Information Technology Division for New Administrators: OPS , Information Technology Division, New Executives, OPS, EPS
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா...