×

சேலம் அரசு மருத்துவமனை மொட்டை மாடியில் கொரோனா நோயாளிகளுக்கு சூரிய குளியல்: தினமும் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு மொட்டை மாடியில் சூரிய குளியல் நடப்பதாக டீன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில், அந்நோயில் இருந்து குணமாவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கபசுர குடிநீர் இந்நோயாளிகளுக்கு கை கொடுப்பதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு யோகா பயிற்சி அளிப்பதாகவும், சத்தான சிறப்பு உணவுகள் வழங்கி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.

இங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. வார இறுதியில் மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு நோயாளிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். சூரிய ஒளியில் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட குளியல் அறையில் zளிக்கின்றனர்.அதேபோல அவர்களுக்கு தினமும் சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகிறது. கொய்யா, நெல்லி, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழ வகைகளும் கொடுக்கப்படுகிறது.
கபசுர குடிநீர், வாழைப்பழம், முட்டை, கொண்டைக்கடலை போன்ற உணவுகளும் வழங்கப்படுகிறது. அதேபோல பிரியாணி, சிக்கன், மீன் போன்றவையும் தினமும் கொடுக்கப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் கூறுகையில், ‘‘சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு சத்தான சிறப்பு உணவுகள் வழங்கி வருகிறோம். அவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் பணி அற்புதமானது,’’ என்றார்.

Tags : corona patients ,terrace ,Corona ,Salem Government Hospital The Salem Government Hospital , Solar bath ,corona patients , terrace, Salem Government Hospital
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...