×

போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் குறைந்த பயணிகளுடன் காலியாகவே பறந்தன. முழு ஊரடங்கு காரணமாக சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் வருகை, புறப்பாடுகளில் பயணிகள் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டது. இதையடுத்து விமானங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு முனையத்தில் கடந்த 19ம் தேதி முழு ஊரடங்கு தொடங்கும் முன்பு வரை 66 விமானங்கள் இயக்கப்பட்டு, 6 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பயணித்தனர்.

ஆனால் நேற்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் புறப்பாடு 27, வருகை 27 மொத்தம் 54 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த விமானங்களில் சுமார் 2,900 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்தனர். சிலர் இ-பாஸ் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தனர்.போதிய பயணிகள் இல்லாமல் கடப்பா, விஜயவாடா, ராஜமுந்திரி, வாரணாசி, புவனேஸ்வர், கவுகாத்தி ஆகிய 6  விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags : flights ,Chennai , Inadequate passenger, Chennai, 6 flights, cancellations
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...