×

மணிப்பூர், மேகாலயா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூரில் உக்ருல் பகுதிக்கு அருகே இன்று ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் டிக்லிபூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 4.1 அளவிலும், மேகாலயாவில் 3.9 அளவிலும் இருந்தது. மேகாலயாவில் இன்று மதியம் 12:24 மணியளவில் துரா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜூன் 26 அன்று மேகாலயாவில் துராவுக்கு மேற்கே 79 கி.மீ தூரத்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடகிழக்கே 332 கி.மீ. தொலைவில் நேற்று மதியம் 12.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் ஜூன் 26 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி இருந்தது.Tags : Earthquake ,Manipur ,Andaman ,Meghalaya ,Nicobar Islands Earthquake , Earthquake, Manipur
× RELATED மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு