×

கொரோனா அறிகுறி இருந்தால் சர்க்கரை நோயாளிகள் உடனே பரிசோதிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் தகவல்

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த  விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 8,426 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 20 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால், உடனே பரிசோதனை செய்ய வேண்டும். இவ்ரகள், மருந்து மற்றும் உணவை முறையாக சாப்பிட்டாலே 99 சதவீதம் குணமடைந்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், திருவிக நகர் மண்டல சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்பிராஜ், திருவிக நகர் மண்டல அதிகாரி நாராயணன், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Sugar patients , Corona, Sugarcane, Municipal Commissioner
× RELATED அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்...