×

சென்னை, மதுரையில் முழு ஊரடங்கால் பருப்பு, எண்ணெய் விற்பனை மந்தம்: விலைகளிலும் மாற்றமில்லை

விருதுநகர்: சென்னை, மதுரையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பருப்பு, பயறு, எண்ணெய் விற்பனை மந்தமாக உள்ளது. விலைகளில் மாற்றமின்றி கடந்த வார விலை நிலவரமே தொடர்கிறது. சென்னை, மதுரை மாநகரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பருப்பு, பயறு, எண்ணெய் உள்பட அனைத்து உணவு பொருட்களின் விற்பனையும் மந்தமாக இருக்கிறது. மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பாசிப்பயறு வரத்து உள்ளது. ஈரப்பதமாக இருப்பதால் சேதம் அதிகம் ஏற்படுகிறது. இதனால் புதுவரத்து வந்தும் விலை குறையவில்லை. கர்நாடகா குல்பர்க்காவில் இருந்து ஜூலை மாத இறுதியில் பாசிப்பயறு வரத்து துவங்கும். உளுந்து செப்டம்பர் மாதமும், துவரை டிசம்பர் மாதமும் புது வரத்து வரும்போது பருப்பு விலைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது என வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மொத்த மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்: ஆந்திரா உளுந்து (100 கிலோ) - 7,800, தஞ்சை உளுந்து  - 7,700, பர்மா உளுந்து  - 7,200, உருட்டு உளுந்தம்பருப்பு லயன் உளுந்து -  10,500 தஞ்சை  - 10,500, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா  - 9,500. பாசிப்பயறு தஞ்சை  - 7,300, ஆந்திரா பயறு  - 8,000, பாசிப்பருப்பு தஞ்சை  - 11,000, பாசிப்பருப்பு ஆந்திரா  - 11,500, துவரை -  6,000, துவரம்பருப்பு  - 9,000. நல்லெண்ணெய் (15 கிலோ) டின்  - 4,538, கடலை எண்ணெய் டின்  - 2,580, பாமாயில் (15 கிலோ) டின்  - 1,335, கடலை புண்ணாக்கு (100 கிலோ)  - 5,100, மல்லி லயன் (40 கிலோ)  - 2,550. நாடு மல்லி -  3,500 நிலக்கடலை பருப்பு (80 கிலோ) -  6,650, எள் புண்ணாக்கு  - 1,500.

குண்டூர் ஏசி வத்தல் குவிண்டால்  - 12,500 முதல் 13,000, குண்டூர் வத்தல் குவிண்டால்  - 10,000 முதல் 11,000, முண்டு வத்தல்  - 8,000 முதல் 11,000, பட்டாணி பருப்பு கனடா  - 6,700, பட்டாணி வெள்ளை - 6,000.
மளிகை பொருட்கள் மொத்த விலை கிலோவில்: மஞ்சள் தூள்  - 140, வெந்தயம்  - 80, கடுகு  - 70, சீரகம்  - 230, சோம்பு  - 130, மிளகு  - 400, புளி  - 160, பொரிக்கடலை  - 60, வெள்ளை பூண்டு -  200, மண்டை வெல்லம்  - 55, சுண்டல்(கருப்பு)  - 55, வெள்ளை  - 70, கடலைப்பருப்பு  - 70, தட்டாம்பயறு 60 என விற்பனையானது. 


Tags : Madurai ,oil sales slowdown ,Madurai hennai , Chennai, Madurai, Full Curfew, Dhal, Oil, Sales
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை