×

Patient Care System’ - கொரோனா நோயாளிகளுக்கு உதவ சென்னை பொறியாளர்கள் உருவாக்கிய புதிய கருவி!!!

சென்னை: சென்னையை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் சிலர் ஒன்றிணைந்து கொரோனா பரவியுள்ள நோயாளர்களுக்கு உதவும் வகையில் புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒட்டுமொத்த உலகமே கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்கள பணியாளர்கள்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்த போரில் பொறியியலாளர்களான தங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டுமென விரும்பி ’Patient Care System’ என்ற புதிய கருவியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஒரு ரூபாய் நாணயம் அளவில் உள்ள இந்த சிறிய கருவி நோயாளிக்கும் மருத்துவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற பாலமாக செயல்படும் வகையில் உருவாக்கியுள்ளனர். கருவியின் நடுவே அமைந்துள்ள பட்டனை, தேவை ஏற்படும்போது அழுத்தினால் போதும், நோயாளியின் பெயர், சம்மந்தப்பட்ட நோயாளியின் மருத்துவ விவரம், மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் சிகிச்சை, எந்த அறையின் எந்த படுக்கையிலிருந்து உதவி கேட்கிறார் என அனைத்து தகவல்களையும் உடனடியாக செவிலியர் அறை அல்லது கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கைகளில் வாட்ச் போன்றும், கழுத்தில் செயின் போன்றும் நோயாளிகள் இதனை மாட்டிக்கொள்ளலாம். மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து codeblue என்ற அவசர தேவை என்கின்ற அறிவிப்பை மருத்துவருக்கும், நோயாளியுடன் வந்தவர்களை உடனடியாக அழைப்பதற்கும் இந்த கருவியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு இன்டர்நெட், வொய்பைய் வசதிகளும் தேவையில்லை. ஒரேநேரத்தில் 100க்கும் மேற்பட்ட அறைகளை 1கி.மீ தூரத்திக்கும் அதிகமான இடத்திலிருந்தும் கண்காணிக்க முடியும். மேலும்,  தேவைப்படும் மருத்துவமனைக்கு கருவிகளை செய்துதர மாணவர்கள்  தயார் நிலையில் உள்ளனர்.



Tags : Madras Engineers ,Chennai Engineers , Patient Care System - A New Tool Developed By Chennai Engineers To Help Patients With Corona !!!
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...