×

சென்னையில் இதுவரை 694 பேர் உயிரிழப்பு: 5 மண்டலங்களில் தலா 5 ஆயிரத்தை கடந்தது கொரோனா நோய் தொற்று: சோழிங்கநல்லூர், பெருங்குடியில் ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 70,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் கட்டுக்கடங்காமல் நோய் தொற்று பரவி வருகிறது. சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் குழு வரை அமைத்தாலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இதுவரை 47,650 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 27,986 பேர் குணமடைந்துள்ளனர். 694 பேர் உயிரிழந்துள்ளனர். 18,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,183 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.18 சதவீதம் ஆண்கள், 39.82  சதவீதம் பெண்கள். இவர்களில் 59.03 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39.50 சதவீதத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.47 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளனர்.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது ராயபுரத்தில் 6,951 பேர், தண்டையார்பேட்டையில் 5,717 பேர், தேனாம்பேட்டையில் 5,534 பேர், கோடம்பாக்கத்தில் 5,216 பேர், அண்ணாநகரில் 5,260 பேர், திருவிக நகரில் 3,981 பேர், அடையாறில் 2,922  பேர், வளசரவாக்கத்தில் 2,058 பேர், அம்பத்தூரில் 1,859 பேர், திருவொற்றியூரில் 1,787 பேர், மாதவரத்தில் 1,395 பேர், ஆலந்தூரில் 1,149 பேர், பெருங்குடியில் 928 பேர், சோழிங்கநல்லூரில் 984 பேர், மணலியில் 726  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வயது வாரியாக, ஆண்களில் 9 வயது வரை உள்ள 750 பேர், 10 முதல் 19 வயது வரை 1,616 பேர், 20 முதல் 29 வயது வரை 5,409 பேர், 30 முதல் 39 வயது வரை 5,955 பேர், 40 முதல் 49 வயது வரை 5,391  பேர், 50 முதல் 59 வயது வரை 4,776 பேர், 60 முதல் 69 வயது வரை 2,700 பேர், 70 முதல் 79 வயது வரை 1,307 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 418  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பெண்களில் 9 வயது வரை 739 பேர், 10 முதல் 19 வயது வரை 1,324 பேர், 20 முதல் 29 வயது வரை 3,719 பேர், 30 முதல் 39 வயது வரை 3,494 பேர், 40 முதல் 49 வயது வரை 3,288 பேர், 50 முதல் 59 வயது வரை 3,080 பேர், 60 முதல் 69 வயது வரை 1,787 பேர், 70 முதல் 79 வயது வரை 803  பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : deaths ,Chennai ,zones , Corona, chennai
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...