×

14 ஆண்டு கால சினிமா கனவு: சாதிக்க துடிக்கும் இயக்குனரை சோதித்துள்ள கொரோனா!!!

சென்னை:  திரைத்துறையில் சாதனைகள் புரியவேண்டுமென்பது பலருடைய கனவாக உள்ளது. 1000 பேர் இயக்குனராக நினைத்தால் அதில் 10 பேருக்குத்தான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டுவதுண்டு. அப்படி பல சோதனைகளை கடந்து சாதிக்க காத்திருந்த ஒருவருக்கு கொரோனவால் அந்த வாய்ப்பு தள்ளிப்போயுள்ளது. திரைத்துறையில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்று போராடி கொண்டிருக்கும் பாக்யராஜ் தன்னுடைய பள்ளி பருவத்திலேயே சினிமா துறையை தேர்வு செய்ததாக கூறுகிறார். சினிமா விருப்பத்தினை பெற்றோரிடம் வெளிப்படுத்தியபோது, அவர்கள் அதற்கு  மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனால், எந்தவித உதவியும் இவருக்கு கிடைக்கவில்லை. உதவி இயக்குனராக சேருவதற்கு பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்ததாகவும் மேலும் பல அவமானங்களை சந்தித்ததாகவும் அவர் கூறுகிறார்.  

பின்னர், ஒரு பெரிய இயக்குனரிடம் உதவியாளராக இருந்தாலும் தனியே படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும் வரை, சொந்த ஊரில் பெரிய மதிப்பு எதுவும் கிடையாது எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். உதவி இயக்குனர்கள் நல்ல உடை அணிவது கூட பலருக்கும் பிடிக்காது என்று திரைத்துறையில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை கூறி மனம் நொந்துபோகிறார் பாக்யராஜ். இதுஒருபுரம் இருக்க, உதவி இயக்குனராக இருந்து கொண்டு திருமணம் செய்து குடும்பம் நடத்துவது பெரிய சிரமம் என்கிறார். உதவி இயக்குனராக 14 ஆண்டுகள் பல அவமானங்களை கடந்து திரைப்படம் இயக்கம் வாய்ப்பு பெற்ற இவரின் பயணத்திற்கு கொரோனா பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், இன்னல்கள் இருந்தாலும் தடைகள் ஏற்பட்டாலும் விடாமல் போராடி சினிமா துறையில் இயக்குனராக சாதிப்பேன் என்ற லட்சியத்துடன் பாக்யராஜ் இருக்கிறார்.

Tags : Corona , Cinema, Director, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...