கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து ரெடி : கெத்தாக அறிவித்த நைஜீரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்!!

நைஜீரியா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் சூழலில், நைஜீரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிக மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளனர். உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக நைஜீரிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கோவிட்-19 ஆராய்ச்சி குழுவினர் கூட்டாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

கார்டியன் நைஜீரிய இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடிலேகே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு மற்றும் பயோ இன்பர்மேடிக்ஸ் பிரிவின் மெடிக்கல் வைராலஜி நிபுணர் டாக்டர் ஓலாடிபோ கோலவோலே கூறுகையில், எங்கள் விஞ்ஞானிகளால் ஆப்பிரிக்க மக்களின் நலனிற்காக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஆகும். இதற்காக மருத்துவ ஆணையத்திடன் இருந்து பல்வேறு ஒப்புதல்களை பெற வேண்டியுள்ளது என்றார்.

Related Stories:

>