×

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அவசர ஊர்தி தயாராக இருக்கும்: ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையை பொறுத்த வரையில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக குறைந்து இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை சிஐடி நகர் பகுதியில் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பணி திட்டமிடல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதன் மூலம் அவசர ஊர்திகள் மருத்துவமனையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என கூறினார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அவசர ஊர்தி தயார் நிலையில் இருக்கும் என கூறினார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேபோல் மக்கள் நிகழ்ச்சிகள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தார். …

The post வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அவசர ஊர்தி தயாராக இருக்கும்: ஆணையர் பிரகாஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Prakash ,Chennai ,Corona ,
× RELATED ரூ.100கோடி நில மோசடி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார்