×

பாலிகீட்ஸ் புழுக்கள் கடத்தல்

திருவொற்றியூர்: எண்ணூர் அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரின் பின் சீட்டில் பாலிகீட்ஸ் என்ற புழுக்களை மண்சட்டி மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த புழுக்களை பறிமுதல் செய்து மாதர்பாக்கம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில், எண்ணூர் முகத்துவார ஆற்றின் சேற்றில் மீன் மற்றும் இறால் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக இருக்கக்கூடிய பாலிகீட்ஸ் என்ற புழுக்களை பிடித்து பாலிதின் கவர்களில் அடைத்து அதை கும்மிடிப்பூண்டியில் உள்ள இறால் பண்ணைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹30,000 ஆகும்.


Tags : Polygides worms, smuggling
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...