×

சென்னை ஐஐடி இயக்குநர் மீது வன்கொடுமை புகார்.: பணியிடங்களை நிரப்புவதில் விதிமீறல் என குற்றச்சாட்டு

சென்னை: சென்னை ஐஐடியில் இடஒதுக்கீடு அடைப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அதன் இயக்குநர் மீது  வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளார் புகாரில்  தாழ்த்தப்பட்ட பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 87% இடங்கள் முறைகேடாத நிரப்பப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுப்பட்ட ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் பதிவாளர் மீதும் வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட பழங்குடி  வகுப்பை சார்ந்தவர்களுக்கு உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் ஆகிய பணிகளை 2% மட்டுமே பணிநியமனம்  அளிக்கப்பட்டு வருகிறது.

பேராசிரியர் பணியில் மொத்தம் உள்ள 47 இடங்களில் வெறும் 5 இடங்களும், இணை பேராசிரியர் இடங்களில் 27 இடங்களில்  வெறும் 4 இடங்களும், மேலும் உதவி பேராசிரியர் பணியில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 7 இடங்கள் மட்டுமே  நிரப்பப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடங்கள் மற்ற பிரிவினருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பணிநியமனம்  வழங்கப்பட்டு இருப்பதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Tags : IIT Director ,Chennai ,Chennai IIT , Chennai IIT, director , misconduct,infringement
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...