×

மதுரையில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு.:சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் காய்கறி விலை உயர்வு

மதுரை:மதுரையில் இன்று நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதால் சந்தைகளில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. மதுரை மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் அதிகாலை முதலே பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். மதுரை பிபி குளத்தில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர்.

ஆனால் நேற்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உருளை கிழங்கு ஒரு கிலோ ரூ. 65 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்காவில் உள்ள வில்லாபுரம், அவனியாபுரம், திருநகர் பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும் மதுரையில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பேருந்துகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மளிகை கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என காங்கேயம் நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Madurai , Full ,Madurai ,midnight ,today
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை