×

திருச்சியில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து பணிகளை முதல்வர் பழனிசாமி வரும் 26-ம் தேதி நேரில் ஆய்வு

திருச்சி:  திருச்சி, தஞ்சை டெல்டா மாவட்டங்களில் குடிமராத்து பணிகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 26-ம் தேதி திருச்சி வருகிறார். தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடும் பொருட்டு விவசாயிகளின் பங்களிப்புடன் ஏரிகளை குடிமராமத்து செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இத்திட்டத்தின் மூலம் அதிகமான நீரை ஏரிகளில் சேமித்துவைக்க முடியும் என்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், அதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள்.

எனவே இத்திட்டம் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். மழை நீரை வீணாக்காமல் சேமிக்க ஏதுவாகவும்,  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், தற்போது, திருச்சி முக்கொம்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ம் தேதி வருகைதரவுள்ளார். பின்னர் அவர் கார் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமராத்து பணிகளையும் பார்வையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முதலமைச்சர் ஆய்வுசெய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Palanisamy ,inspection ,Trichy , Trichy, Citizenship Work, Chief Palanisamy
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...