×

இந்தியாவில் முதல் முறையாக தடுப்பு மருந்து அறிமுகம்

புதுடெல்லி: மிதமான மற்றும் லேசான கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, ‘பெவிபிரவிர்’ என்ற தடுப்பு மருந்து இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு மாத்திரையின் விலை 103. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அதே நேரம், தற்போது பிற உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தும் மருந்துகள் சில, கொரோனாவுக்கும் பலன் அளிப்பது குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், ஜப்பானில் குளிர்காய்ச்சலுக்கு தரப்படும், ‘பெவிபிரவிர்’ என்ற மருந்து கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை தருவது நிரூபணமாகி உள்ளது. ஏற்கனவே, சீனா, ரஷ்யா போன்றவை இம்மருந்தை வழங்க அனுமதித்து உள்ளன. அதேபோல், இந்தியாவிலும் இந்த மருந்தை மருத்துவமனைகளில் கொடுத்து பரிசோதிக்கலாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மும்பையை சேர்ந்த கிளென்மார்க் மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக ‘பெவிபிரவர்’ மருந்தை அறிமுகம் செய்துள்ளது. ‘பெபிப்ளூ’ என்ற பிராண்ட் பெயரில் வெளியிடப்படும் இது, விரைவில் மருத்துவமனைகள், மருந்தகங்களில் கிடைக்கும். 34 மாத்திரைகள் கொண்ட ஒரு பட்டையின் விலை 3,500. ஒரு மாத்திரையின் (200 மிகி) விலை ₹103. ‘இதை மிதமான, லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த மாத்திரை எந்தளவுக்கு பயன் அளிக்கும் என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியும்,’ என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எவ்வளவு சாப்பிடலாம்?
‘பெவிபிரவிர்’ மருந்தை முதல் நாளில் இருமுறை 1,800 மி.கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, தினமும் இருமுறை 800 மிகி வீதம் 14 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். இது, 4 நாட்களில் வைரசின் அளவை கட்டுப்படுத்தி, விரைவான அறிகுறி தரும் என்கிறது மருந்து தயாரிப்பு நிறுவனம்.

* கொரோனா பாதிப்பை ‘பெவிபிரவிர்’ கட்டுப்படுத்தினாலும், இதுவே கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து அல்ல.
* மிதமான, லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இது பலனளிக்கும்.
* தீவிரமாக பாதித்தவர்களுக்கு பலன் தருமா என்பது இனிதான் தெரியும்.
* மூலிகை தாவரத்தின் சத்துக்களை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது.



Tags : Introduction ,India ,time , India, Preventive Medicine, Bevipravir
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்