×

கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்தை உணவு முறையாக பயன்படுத்துகிறோம்: சித்தா டாக்டர் சாய் சதீஷ் விளக்கம்

சென்னை: கொரோனா வைரஸ் நோய்க்கு சாதாரணமான உணவு பொருட்கள் தான், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் தான் மருந்தை உணவு முறையாக பயன்படுத்துகிறோம். இந்த வழிகாட்டுதலின் படி செய்து வந்தால் 7 நாட்களில் இயல்பான நிலைக்கு வருகின்றனர் என்று சித்த மருத்துவர் சாய் சதீஷ் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் தமிழக அரசு சார்பில் ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் என்ன மாதிரியான சித்த மருந்துகள் உட்கொள்ள வேண்டும், என்ன மாதிரியான உணவு எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க முடியும் என்று சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும் சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க தினமும் காலை எழுந்தவுடன் உப்பு வெண்ணீர் தொண்டையை சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு மூலிகை தேநீர் குடிப்பது சிறந்தது. இதையடுத்து பிரணயாமம், மூச்சு பயிற்சி போன்றவை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு சிறிது நேரத்திற்கு பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய கபசுரக்குடிநீரை பெரியவர் 50 மிலி முதல் 60 மிலி வரையும், சிறியவர்கள் 20 மிலி முதல் 30 மிலி வரை குடிக்க வேண்டும். பின்னர் காலை உணவாக சுண்டல், கேழ்வரகு, பச்சை காய்கறி, பழங்கள், சம்பா அரிசி, திணை அரிசி பொங்கல் போன்றவை சாப்பிடுவது மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது விரைவில் செரிமானம் அடையக் கூடிய உணவுகள் ஆகும்.

அதைத் தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து நொச்சி புகை, துளசி புகை, மஞ்சள், உப்பு போன்றவை மூலம் வேது பிடிப்பதன் மூலம் வைரஸ் பரவாது விரைவில் அழிந்து விடும். இதைதொடர்ந்து எலுமிச்சை பழச்சாறு, நெல்லிச்சாறு, இஞ்சி கலந்த தேன், புதினாசாறு போன்றவை சாப்பிடுவது சிறந்தது. பின்னர் மதிய உணவில் மிளகு ரசத்துடன் கூடிய உணவில் கசப்பு, துவர்ப்பு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். மாலையில் கபசுரக்குடிநீர், நொச்சிகுடிநீர், மூலிகை சூப் போன்றவையும் சாப்பிட வேண்டும். அதைப்போன்று இரவு நேரங்களில் உளுந்து சாதம், சாம்பார், மிளகு ரசம், பாகற்காய் பொரியல், வாழைப்பூ பொரியல், மோர், சீரகத் தண்ணீர் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் நெல்லிக்காய் சாதம், எலுமிச்சை இஞ்சி ரசம், மணத்தக்காளி கூட்டு, தூதுவளை ரசம், சுண்டைவற்றல், எள்ளு சாதம், மிளகு குழம்பு, கண்டந்திப்பிலி ரசம், பட்டாணி, முருங்கைக் கீரை கூட்டு போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தாளிசாதி வடகம் மாத்திரையை மூன்று வேலையும் வாயில் வைத்திருந்தால் தொண்டை பகுதியில் கிருமிகள் பெருகாமல் இருக்கும். மூலிகை தேநீரான சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, அக்ராகாரம் சேர்ந்த கூட்டுக் கலவையாக சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மரமஞ்சள் குடிநீர் போன்றவை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கபசுரக்குடிநீர் கொடுக்க முடியாத குழந்தைகளுக்கு உரை மாத்திரையை தேனில் கலந்து கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதிலும் 10 கூட்டு மருந்துகள் சேர்க்கப்படுகிறது. மேலும் கபசுரக்குடிநீருடன், ஆடாதொடை குடிநீர் குடிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகள் 5 முதல் 7 நாட்களில் குணமாகி இயல்பு நிலை அடைகின்றனர்.

சித்த மருத்துவத்தில் சுரத்திற்கு இது போன்று நிறைய மருந்துகள் உள்ளது. சுரத்திற்கு குடிநீரான மருந்துகள் தான் சிறப்பாக செயல்படும். நீர்ம நிலையில் உள்ள மருந்துகள் தான் வைரசை அழிக்கக் கூடியது சிறப்பாக செயல்படும். கூட்டு மருந்துகள் அனைத்தும் பாலிஹெர்பல் காம்பினேசன் இதில் ஆயிரக்கணக்கான மூலக்கூறுகள் இருப்பதால் அதை எதிர்த்து இந்த வைரஸ் போராடுவது சிரமம் ஆகும். கூட்டு மருந்துகள் சிறப்பாக செயல்படும். மரமஞ்சள் குடிநீர், கபசுரக்குடிநீர் போன்று நிறைய குடிநீர்கள் உள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது ஆகும். மேலே குறிப்பிட்டதை முறையாக கடைபிடித்து வந்தால் 5 முதல் 7 நாட்களுக்குள் குணமாகி வீட்டிற்கு சென்று விடலாம். இந்த மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

இது சாதாரணமான உணவு பொருட்கள் தான், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் தான் மருந்ைத உணவு முறையாக பயன்படுத்துகிறோம். இந்த வழிகாட்டுதலின் படி செய்து வந்தால் 7 நாட்களில் கொரோனா நெகட்டிவ் என்று இயல்பான நிலைக்கு வருகின்றனர். எனவே கொரோனா பாசிட்டிவ் என்று வந்தால் அச்சப்படாமல் மருத்துவர்கள் கூறும் வழிகாட்டுதல் படி செய்து வந்தால் கொரோனாவில் இருந்து குணமாகி இயல்பு நிலைக்கு வந்து விடலாம். மேலும் சாதாரணமாக உள்ள மக்கள் தினமும் கபசுரக்குடிநீர் 2 வேளையும், அமுக்கரா மாத்திரை இரண்டு வேளை சாப்பிட வேண்டும். சுரம், இருமல் இருப்பவர்கள் அதிமதுரம் மாத்திரை 2 வேளையும், பிரம்மாணந்த பைரவம், நொச்சி குடிநீர், ஆடாதொடை மணப்பாகு ( 2 தேக்கரண்டி 30 மிலி நீருடன்) திப்பிலி ரசாயனம் உட்ெகாள்ள வேண்டும். உடலில் வெப்பம் அதிகம் உள்ளவர்கள் பிரம்மாணந்த பைரவம் ( காலை மற்றும் மாலை  7 நாட்கள் இஞ்சி சாறில்), ஆடாதொடை மணப்பாகு (2 தேக்கரண்டி  30 மில்லி நீருடன் ) திப்பிலி ரசாயனம் போன்றவை உட்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : Sai Satish ,Sita Dr , Corona, Sita Dr. Sai Satish, Illustration
× RELATED ஆங்கில, சித்த மருந்துகளை இணைத்து ...