×

கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பணி : பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஈசாராஜன் ஏரியோடு, தேர்வாய் ஏரியை இணைத்து நீர்தேக்கம் அமைத்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு 2011ம் திட்டம் அமைத்து செயல்படுத்த துவங்கியது.  இந்த திட்டத்திற்காக 800 ஏக்கர் பட்டா நிலம், 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது.  இந்நிலையில், அரசு நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு 1 மடங்கு இழப்பீட்டை அறிவித்தது.  விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் உச்சநீதி மன்றம் சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு, அரசு மதிப்பீட்டில் 2.4 மடங்கு இழப்பீட்டை வழங்கியது. மீதம் உள்ள 1.6 மடங்கு இழப்பீட்டு தொகை மற்றும் அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 589 விவசாயிகளுக்கு தர வேண்டிய வட்டி தொகையான ₹38.5 கோடியை வழங்க கோரி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திடம்  கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு விரைந்து பாக்கி தொகையை வழங்க அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக நீர்தேக்க திட்டபணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. பருவமழை துவங்க உள்ள நிலையில் நீர்த்தேக்க திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து தமிழக முதல்வரால் இந்த நீர்தேக்க திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளான முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கண்ணண்கோட்டை நீர்தேக்க திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள், நீர்த்தேக்க பகுதி, கரைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இதில், உதவி பொறியாளர்கள் தனசேகர்,  பத்மநாபன், சுந்தரம், பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : water storage ,Kannanpettai ,Gummidipoondi , Gummidipoondi,Public works officers,survey
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...