×
Saravana Stores

திருவள்ளூர், பெரியபாளையம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 11 பேர் சிக்கினர்

532 பாட்டில்கள்,  3 பைக்குகள் பறிமுதல்

திருவள்ளூர் : திருவள்ளூர், பெரிய பாளையம் அருகே  மதுபாட்டில்கள் கடத்திய 11  பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 532 மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர்  மாவட்டத்தில், ஊரடங்கு காலத்தில் கூடுதல் விலைக்கு விற்க, டாஸ்மாக்  கடைகளில் இருந்து மொத்தமாக சரக்குகளை வாங்கி, வாகனங்களில் கடத்துவதாக  எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் வந்தது.

அவரது உத்தரவின்பேரில், நேற்று  செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில்  ஈடுபட்டு இருந்தபோது,  பெட்டிகளுடன் சென்ற மூன்று பைக்குகளை நிறுத்தி சோதனை  செய்தனர். அப்போது, அவர்கள் மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில்,  அவர்கள் தண்ணீர்குளம் ஜெயசுதன்(26), ஜெய்குமார்(34), கலையரசன்(37)   என்பதும், கூடுதல் விலைக்கு விற்க 248 குவார்ட்டர் மது பாட்டில்களை  வாங்கிச் சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 248  குவார்ட்டர் மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு பைக்குகளை  பறிமுதல் செய்தனர்.

இதேபோல், பைக்கில் மதுபானங்களை கடத்தி வந்த  சென்னை கொளத்தூர் ஆகாஷ்(21), தினேஷ்(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 96 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல்  செய்தனர்.ஊத்துக்கோட்டை: நேற்று நள்ளிரவு முதல்,  தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால், பெரியபாளையம் அடுத்த வெங்கல்    பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கிருந்து, அதிக அளவில்  மதுபானங்களை சென்னையை சேர்ந்தவர்கள் வாங்கிச்செல்கின்றனர். இதனால்  எஸ்.பி.   உத்தரவின்பேரில், போலீசார் வெங்கல் பஜார் பகுதியில்  நேற்று திடீரென  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற பைக்குகளை மடக்கி  சோதனையிட்டனர்.

அப்போது, ஆவடியை சேர்ந்த கிருஷ்ணன் (30), சென்னை  கொருக்குபேட்டையை சேர்ந்த வாசுதேவன் (28), ஒரக்கடத்தை சேர்ந்த கார்த்திக்  (27),  கன்னடபாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (30), குருவாயல் பகுதியை சேர்ந்த  மதன் (20) ஆகிய 5 பேரிடம் 138 பீர் உள்ளிட்ட பல்வேறு வகையான மதுபான  பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5  பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், அலமாதியை சேர்ந்த  சரவணன் (37) என்பவர் சரக்கு வேனில் 50 பீர் பாட்டில்கள் எடுத்துச்சென்றபோது  போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.    


Tags : persons ,Tiruvallur ,liquor dealers ,Periyapayalam , Eleven persons were abducted by police near Periyapayalam for smuggling liqours: Tiruvallur
× RELATED கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டாசில் கைது