×

காங்கிரஸ் அலுவலகத்தில் நாற்காலிகள் திருட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சன்னதி தெருவில் திருவொற்றியூர் காங்கிரஸ் கமிட்டியின் கட்சி அலுவலகம் உள்ளது.  இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கட்சி நிர்வாகிகள் இந்த அலுவலகத்திற்கு வந்தனர். உள்ளே வந்து பார்த்தபோது அங்கே பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கட்சி நிர்வாகி ஆறுமுகம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.Tags : Theft ,office ,Congress , Congress office, chairs, theft
× RELATED தலைமை செயலாளர் எதிர்மனுதாரராக...