×

முழு ஊரடங்கு இந்த முறை கடுமையாகவே இருக்கும்; சமூக பரவலாக மாறாமல் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சர்கள் கூட்டாக பேட்டி

டெல்லி: முழு ஊரடங்கு இந்த முறை கடுமையாகவே இருக்கும்; சமூக பரவலாக மாறாமல் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

 இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயக்குமார், பாண்டியராஜன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் இதில் பங்கேற்ற அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது; முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஊரடங்கின் போது தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 19-ல் அமலுக்கு வரும் ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது; சமூக பரவலாக மாறிவிடக்கூடாது. சென்னையில் மண்டல வாரியாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மாநகரில் தினமும் 150 இடங்களில் காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நடைபெறுகின்றன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பற்றி கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள முதியோர்களுக்கு பிபி, சர்க்கரை பரிசோதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கிட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளனர்.


Tags : Ministers , Full curfew, social diffusion, ministers
× RELATED பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச...