×

லடாக்கில் ராணுவ வீரர்களின் வீரமரணம் ஆழ்ந்த மன உளைச்சலை தருகிறது; வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது : ராஜ்நாத் சிங் வேதனை!!

சென்னை: லடாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள் அன்று இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.ஆனால் இதைத் தொடர்ந்து இந்த மோதலில் படுகாயமடைந்த மேலும் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனிடையே தமது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: லடாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது. இக்கட்டான நேரத்தில் ராணுவ வீரர்களுக்கு தோளோடு தோளாக நாடு உறுதுணையாக இருக்கும். ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் துணிச்சல் மிக்க தைரியம் மற்றும் வீரத்தை கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம். கால்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களில் இழப்பு ஆழ்ந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது. நமது வீரர்கள் கடமை வரிசையில் முன்மாதிரியான தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த மரபுகளில் படி, தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். எனப் பதிவிட்டுள்ளார். 


Tags : death ,soldiers ,Ladakh ,Rajnath Singh ,army , Ladakh, Soldiers, Heroic Death, Trauma, Sacrifice, Bravery, Rajnath Singh, Pain
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி