×

ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கு : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி: சென்னை ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திலே சென்னையில் தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 35 குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இதுகுறித்து ஜூன் 15ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ராயபுரம் காப்பகத்தில் முதலில் ஒரு குழந்தைக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

அவருக்கு சோதனை நடத்தியதில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடைய குழந்தைகளுக்கும் சோதனை நடத்தியதில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நோய் தாக்கத்தை பொறுத்து குழந்தைகள் பிரித்து வைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறார்கள் என விளக்கம் அளித்துள்ளது. குழந்தைகள் காப்பகம் முழுவதுமாக சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் குழந்தைகள் காப்பகத்தில் நோய் தொற்று பரவியது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் சென்னைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டு தங்க வைப்பதால் எங்கிருந்து தொற்று பரவியது என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Tags : children ,Tamil Nadu , Raipuram Archive, Children, Corona, Government of Tamil Nadu, Report
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...