×

தமிழகத்தில் கடந்த 6 வாரத்தில் ஆண்களை விட கொரோனா பாதிப்பு பெண்களிடம் 6 % உயர்வு!!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு வாரத்தில் கொரோனா பாதிப்பு பெண்களிடம் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் பெண்களைவிட ஆண்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது பெண்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. மே 5ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 4,058 பேர் பாதிக்கப்பட்டிருந்தபோது,  அதில் 1,311 பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அதாவது மொத்த பாதிப்பில் 32% பெண்களாகும். அடுத்த பத்து நாட்களில் மே 15ம் தேதி தமிழகத்தில் 3,463 பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது மாநிலத்தில் மொத்தம் 10,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்களின் சதவீதம் 34% ஆக உயர்ந்தது.இந்நிலையில் தமிழகத்தில் தற்சமயம் மொத்தம் 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17,124 பெண்கள் ஆவர். தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 38% பேர் பெண்களாக உள்ளனர். வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் மூலம் நோய் பரவல் தொடங்கியதால், முதலில் பெண்களில் அதிக பாதிப்பு இல்லை. ஆனால் நோய் பரவல் அதிகமாகி வரும்போது வீட்டில் உள்ள பெண்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

அதிலும் வயது வாரியாக பார்த்தால் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்த சரி பாதி ஆணும் பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர். 13-60 வயதில் 37.7% பாதிப்பும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.21% பாதிப்பும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை விட அவர்களின் இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 38% பாதிப்பு பெண்கள் என்றாலும் இறப்புகளில் 31% சதவீதம் மட்டுமே பெண்கள். தமிழகத்தில் ஏற்பட்ட 435 இறப்புகளில் 135 பெண்கள் ஆவர்.

Tags : men ,Tamil Nadu Women ,Tamil Nadu , Tamilnadu, men, women, corona, virus, much, vulnerability
× RELATED தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம்...