×

இந்தியாவில் கொரோனா பரவல் நவம்பரில் மிக மிக மோசமடையும் என ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்கை : வென்டிலேட்டர், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

டெல்லி : இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா பரவல் உச்சத்தை எட்டும் வாய்ப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகமான ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் வெளிப்படத் தொடங்கியது. இதையடுத்து மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது 5வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதிலும் உலக அளவில் இந்தியா 4ம் இடத்திற்கு முன்னேறும் அளவு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினமும் 10,000 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது.கொரோனாவால் இதுவரை 9520 பேர் உயிரிழந்த நிலையில் 1,69,798 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த ஆய்வு நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தால் நியமிக்கப்பட்ட குழு, நவம்பர் மாதத்தில் வைரஸ் பரவல் உச்சத்தை எட்டும் என எச்சரித்துள்ளது.

8 வார கால ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் வைரஸ் தொற்றின் வேகம் குறைந்து, அதன் உச்சக்கட்டம் தள்ளிபோடப்பட்டதாக கூறிய அக்குழு, ஆனால் நவம்பர் மாதம் மத்தியில் கொரோனா பரவலின் உச்ச நிலையை நாடு சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது. அப்போது வெண்டிலேட்டர், மருத்துவமனை படுக்கும் வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் அதனை சமாளிக்கும் நடவடிக்கைகளை இப்போதே தொடக்க வேண்டியது அவசியம் என்றும் அக்குழு அபாய அறிவிப்பு கொடுத்துள்ளது.


Tags : ICMR ,India ,Ventilator , India, corona, spread, November, worsening, ICMR. , Alarm, ventilator, bed, amenities, scarcity, danger
× RELATED இந்தியாவில் 20 கோடி மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்