×

ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவில் கோர விபத்து : சீனாவில் ஆயில் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 18 பேர் உயிரிழப்பு; 200 பேர் படுகாயம்

பெய்ஜிங் : சீனாவில் சாலையில் சென்ற ஆயில் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் பலர் பலியாகிவிட்டனர். 200 பேர் வரை படுகாயம் அடைந்தனர். தென் கிழக்கு சீனாவில் ஜி ஜியாங் மாகாணத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரென ஒன்று வெடித்து சிதறியது. அடுத்த சில நொடிகளில் அந்த இடமே தீப்பிழம்பாக காட்சியளித்துள்ளது.டேங்கர் லாரி வெடித்து சிதறியதும் அருகில் இருந்த கட்டிடங்கள், தொழிற்சாலைகளிலும் தீப்பரவியது.

சாலைகளில் சென்று கொண்டிருந்த கார்கள் தீப்பிடித்து வெடித்து சிதறின. ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் வகையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆயில் டேங்கர் வெடித்து சிதறிய கொர விதத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களும் உருகுலைந்துள்ளன.


Tags : oil tanker truck explosion ,China , Hollywood Pictures, Lightning, Accident, China, Oil Tanker, Truck, Explosion, Disaster, Death
× RELATED நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்