×

மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? மத்திய அரசு மீது கமல் காட்டம்

சென்னை: ‘மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்?’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நேரத்தில், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் மீதான சுமையை அரசே அதிகரிக்கும் செயலாகும். பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பெட்ரோல், டீசல் விலையை பெரிதும் சார்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைத்து, மக்களின் பொருளாதார சுமையை குறைக்கக்கூடும்.

அதற்கு மாறாக தொடர்ந்து விலையை உயர்த்திக்கொண்டே செல்லும் மக்கள் விரோத போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.கச்சா எண்ணெய் விலையுயர்ந்த போது அதிகரித்த விலையும், வரிகளும் மக்கள் மீது சுமத்தப்பட்டது. இப்போது குறைந்து வரும் கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கும் தொடர்பு இல்லாதது போல் கள்ள மவுனம் காப்பது ஏன்?  விலை குறைப்பு என்பது, மக்களின் அன்றாட செலவில் சிறுபகுதியை குறைக்கும் என்பது அரசுகளுக்கு தெரியாதா, சாமானியரும், சிறுதொழில் முனைவோரும்தான் இந்த நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. எனவே, உடனே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

* சாமானியரும், சிறுதொழில் முனைவோரும்தான் இந்த நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

Tags : Central Government , People's Livelihood, Petrol, Diesel, Central Government, Kamal
× RELATED பணியிடங்களில் பெண்கள் பாலியல்...