×

கொரோனாவின் எஃகு கோட்டை மாறிய சென்னை; சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்குவதை அரசு நிறுத்தியதாக தகவல்...!

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அறிவித்தது. எனினும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்திலும், வரும் கடந்த மே 14-ம் தேதி முதல் அரசு அறிவித்து வருகிறது. 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், 8 மண்டலங்களாக பிரிந்து, மண்டலம் விட்டு மண்டலம் சென்றால், இ-பாஸ் அவசியம், மண்டலத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்றால் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று அறிவித்தது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Madras ,corona ,Chennai ,Government ,outsiders ,persons , Madras, the corona's steel fortress; Government has stopped issuing e-pass to persons from Chennai ...
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...