×

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்?

சென்னை:   தமிழகத்தில் தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் 3,600 பள்ளிகளில் 2 லட்சம் மாணவ- மாணவியர் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கின்றனர். கொரோனா காரணமாக மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாணவர்கள் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 மதிப்பெண்களும், வருகைப் பதிவுக்கு 20 மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்களை தேர்வுத்துறை கேட்டுப் பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளில் நிலை வேறு. முறைகேடு செய்ய வாய்ப்பு அதிகம். வேண்டிய மாணவர்களுக்கான மதிப்பெண்களை கூட்டியோ குறைத்தோ கொடுக்க வாய்ப்புள்ளது.

நன்றாக படித்து வரும் மாணவர்கள் வேண்டப்படாதவர்களாக இருந்தால், அந்த மாணவர்களின் மதிப்பெண்களை குறைத்துக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் பத்தாம் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்கள் மேனிலை வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் விரும்பிய பாடப் பிரிவு கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை கவனமுடன் பள்ளிக் கல்வித்துறை பெற வேண்டும். இதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால் மேற்கண்ட வழிகளில் முறைகேடுகளை செய்ய வா்ய்ப்பு அளித்தது போல ஆகிவிடும். எனவே பள்ளிக்கல்வித்துறை இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : 10th Grade Exam Ratal Private School Students ,private school students , Jackpot , 10th grade exam ,Rathal private school students?
× RELATED திண்டிவனம் அருகே விஷ வண்டு...