×

திண்டிவனம் அருகே விஷ வண்டு கொட்டியதால் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

*அமைச்சர் மஸ்தான் நேரில் ஆறுதல்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே விஷ வண்டு கொட்டியதால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ மாணவிகளை அமைச்சர் மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.திண்டிவனம் வந்தவாசி சாலை, கருவம்பாக்கம் கிராமத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்தபோது, பள்ளி கட்டிடத்தில் விஷ வண்டு கட்டியிருந்த கூட்டில் இருந்து பறந்து வந்த வண்டுகள், மாணவ மாணவிகளை கொட்ட ஆரம்பித்தன.

இதனால் அலறி அடித்துக் கொண்டு மாணவர்கள், அழுதபடி ஓட்டம் பிடித்தனர். பின்னர் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சில குழந்தைகள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். இதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பகுதியில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திண்டிவனம் அருகே விஷ வண்டு கொட்டியதால் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Minister ,Mastan ,Dindivanam ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது