×

மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது.: இலவச மின்சார ரத்து உறுதி செய்யும் வரை தொடர் போராட்டம் என விவசாயிகள் அறிவிப்பு

கோவை: தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மாட்டாது என்று உறுதி செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார கொள்கை விவசாயிகளுக்கு எதிரானது என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யும் வரை விவசாய பகுதிகளில் கருப்பு கொடிகளை ஏத்தி போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வேலூரில் நடைபெற்ற விவசாய சங்க செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி ஜூலை 5-ம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 


Tags : electricity cancellation , Electricity ,canceled,Farmers , electricity ,cancellation
× RELATED மின்கட்டணம் செலுத்துவதில் மாற்றம்