×

தனியார் நிறுவனத்தை ஊழியர்கள் முற்றுகை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சிமென்ட் ஆலை,  கரும்பு ஆலை மற்றும் சாட்டிலைட்  போன்றவற்றுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு  300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், நிலுவையிலுள்ள  ஊதியம் மற்றும் முழுமையான ஊதியம் வழங்க கோரி  நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவன நுழைவாயிலை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் ஊரடங்கு சமயத்தில் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், உங்கள் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Siege ,company , Private company, employees, siege
× RELATED நங்கநல்லூர் – பழவந்தாங்கல்...