×

நினைச்சது ஒன்னு; நடந்தது ஒன்னு மத்திய அரசு அமல்படுத்திய 4 கட்ட ஊரடங்கும் தோல்வி: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக நாட்டில் 4 கட்டங்களாக மத்திய அரசு தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால், இந்த ஊரடங்கு நடவடிக்கையானது தோல்விதான் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி எதிர்பார்த்த பலனை ஊரடங்கு நடவடிக்கை தரவில்லை. மத்திய அரசின் ஊரடங்கு நோக்கம் தோல்வியடைந்தது என்பது தெளிவாகவே தெரிகிறது. நாட்டில் வைரஸ் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் தனது கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அனைத்து செயல்பாட்டையும் திறப்பது, புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஆதரவு அளிப்பதில் மத்திய அரசின் நிலைபாடு என்ன என்பது பற்றி தெரிவிக்க வேண்டும். வைரஸ் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை தளர்த்தும் ஒரே நாடு இந்தியாவாகதான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Rahul Gandhi ,Central Government ,government , Central Government, 4 phase curfew, Rahul Gandhi, Corona
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...