×

ஏரி குடிமராமத்து பணி தொடக்கம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்  கிழக்கு பகுதியில் 914  ஏக்கர் பரப்பளவுள்ள ஈசா  ஏரி  உள்ளது. இந்த ஏரியில், மழை காலத்தில் தண்ணீர் நிரம்பினால் இந்த தண்ணீர் திறக்கப்பட்டு தாராட்சி, பாலவாக்கம், காக்கவாக்கம், முக்கரம்பாக்கம் என 14 ஏரிகளுக்கு சென்று தண்ணீர் நிரம்பப்பட்டு  பின்னர் பாசனம் செய்யப்படும். இந்நிலையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்  கிழக்கு பகுதியில் உள்ள  ஈசா ஏரியினை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி கரையை பலப்படுத்த 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான விழா நேற்று நடைபெற்றது.  இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அம்மினி மகேந்திரன், ஊத்துக்கோட்டை முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஷேக்தாவுத், கூட்டுறவு சங்க தலைவர்கள் தர், பிரஸ் மணி, அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் லதா அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags : Lake Citizenship Initiative , Uttukkottai panchayat, water, Palakkavu, Conservation
× RELATED ஒதிக்காடு ஏரி குடிமராமத்து பணி தொடக்கம்