×

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனினும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என கூறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

வட மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,thunderstorms ,Weather Center , Tamil Nadu, Rain, Weather Center
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...