முயல்களை வேட்டையாடி சமைத்தல், பூனையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற கொடூரம்! : விலங்குகளை சித்ரவதை செய்யும் டிக் டாக் வெறியர்கள்!!

பெங்களூரு : கர்நாடகத்தில் முயல்களை வேட்டையாடி, நாய்களுக்கு உணவாக கொடுத்து அதனை டிக் டாக்கில் வீடியோவாக பதிவு செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் ராய்ச்சூரைச் சேர்ந்த பவன் நாயக், சுவாமி நாயக் ஆகிய இருவரும் தங்கள் கிராமத்தை ஒட்டி உள்ள வன பகுதியில் முயல்களை வேட்டையாடி, நாய்களுக்கு உணவாக கொடுத்துள்ளனர். வனப்பகுதிகளில் இருந்து மான் குட்டிகளை பிடித்து வந்து, அதனை ஆடுகளிடம் பால் குடிக்கவைத்த வீடியோவும் டிக் டாக்கில் வைரலாக பரவியது.

இதையடுத்து இருவரும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். ஆந்திர மாநில கல்யாண துர்கம் அருகே முயல்களை வேட்டையாடி சமைத்து, அதனை டிக் டாக்கில் பதிவிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.இதே போல் நெல்லை மாவட்டம் பழவூர் அருகே பூனையை தூக்கில் தொங்கவிட்டு அதனை டிக் டாக்கில் வீடியோவாக பதிவேற்றிய கொடூரமும் அரங்கேறியுள்ளது. பூனையை தூக்கில் மாற்றி கொலை செய்த தங்கராஜ் என்ற இளைஞரை போலீசார் மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். டிக் டாக் வீடியோக்களில் சாதி, மத மோதல்களை உருவாக்குவது குடும்பங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துவது என்று ஏற்கனவே டிக் டாக் பயனாளர்கள் எல்லை மீறி சென்றுவிட்டனர். தற்போது இவர்களால் விலங்குகள் உயிருக்கு ஆபத்து அதிகரித்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: