×

இனி ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகளை திறக்கலாம் : ரயில்வே அமைச்சகம்

டெல்லி : ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவற்றிற்றுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிப்பில் உள்ள தளர்வுகளைச் சுட்டிக்காட்டிப் பல நிறுவனங்கள், அரசுத் துறைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஜூன் ஒன்று முதல் ஏசி வசதி இல்லாத 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இப்போது இப்பொது இவற்றை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் கண்டிப்பாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளபட வேண்டும். சமைத்த உணவு விற்கவும் இப்போது அனுமதி வழங்கப்படுகிறது.அதே வேளையில் உணவு நிலையங்கள் மற்றும் புத்துணர்ச்சி அறைகளை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல் உணவுகள் விற்றுக் கொள்ளலாம்.கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக திறக்க மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Railway Ministry Restaurants ,bookstores ,drug stores ,Railway Ministry , Railways, Restaurants, Bookstores, Drugstores, Openings, Ministry of Railways
× RELATED மருந்து கடைகளை ஆய்வு செய்ய கோரிக்கை