×

திருவிக நகர் மண்டலத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று: அச்சத்தில் பொதுமக்கள்

பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின்  எண்ணிக்கையில் திருவிக நகர் மண்டலம் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு  கொரோனா  உறுதியாகியுள்ளது. அதன்படி, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் டிரைவராக பணிபுரிந்து வரும் ஓட்டேரி சூளைமேடு தெருவை சேர்ந்த நபர், அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில்  தடயவியல் துறையில் பணிபுரியும் பாரக்கா தெருவை  சேர்ந்த நபர், குட்டியப்பன் தெருவை சேர்ந்த ஒரு பெண், ஓட்டேரி தாசமகான் தெரு, திருவிக தெரு உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர், பேசின் பிரிட்ஜ் பகுதியில் பிகே முதலி தெரு, ஸ்டிரான்ஸ் ரோடு  நரசிம்ம நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் ஆகியோருக்கும் நோய் தொற்று உறுதியானது.

புளியந்தோப்பு பகுதியில் அங்காளபரமேஸ்வரி தெரு, தாஸ் நகர், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் 8 பேர், அயனாவரம் பகுதியில் பொன்னுவேல்புரம்  பகுதியில் 33 வயதுடைய தனியார் மருத்துவர்,  செண்பகவல்லி தெருவைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரியும் 27 வயது நபர் ஆகியோருக்கும் கொரோனா  தொற்று உறுதியாகியுள்ளது. திருவிக நகரில் மளிகை கடை வைத்துள்ள 62 வயது நபர்,  பெரவள்ளூர் ஜெகநாதன் சாலை, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் 2 பேர், செம்பியம் காந்திஜி தெரு, அன்பழகன் தெரு, கக்கன்ஜி  காலனி ஆகிய பகுதிகளில் 6 பேர் என நேற்று  ஒரே நாளில் திருவிக நகர் மண்டலத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தினந்தோறும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருவிக நகர் மண்டலத்தில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

தண்டையார்பேட்டை: ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அதன்படி, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிக்கும் 45 வயது தலைமை காவலர், கொத்தவால்சாவடி அப்பாசாமி தெருவை சேர்ந்த 4 பேர், நாகமணி கார்டன் பகுதியை சேர்ந்த 4 பேர், வரத முத்தையா தெருவை சேர்ந்த 3 பேர், ஆச்சாரப்பன் தெருவில் ஒருவர், கந்தப்பசெட்டி தெருவை சேர்ந்த 3 பேர், பெருமாள் முதலி தெருவை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புழல்: மாதவரம் மண்டலம் 23வது வார்டு வெஜிடேரியன் நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த 38 வயது ஆண், 37 வயது பெண், 10, 6 மற்றும் 4 வயதுடைய குழந்தைகள் என 5 பேர், 24வது வார்டு புத்தகரம் சிங்காரவேலன் நகர் 3வது தெருவை சேர்ந்த காவலரின் 27 வயது மனைவி, சுபாஷ் நகரை சேர்ந்த 19 வயது ஆண், 16 வயது பெண், 25வது வார்டு கதிர்வேடு அடுத்த வீரராகவன் நகர் 7வது தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சார்ந்த  38 வயது, மற்றும் 16 வயது உடையவர்கள் ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், காமராஜ் நகர், வஉசி தெருவை சேர்ந்த 76 வயது நபர், குரோம்பேட்டை, ஜோசப் காலனியை சேர்ந்த 36 வயது பெண், கிழக்கு தாம்பரம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த 65 வயது பெண், 50 வயது ஆண், 19 வயது பெண் ஆகியோர் என 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது.

துபாயிலிருந்து வந்த 23 பேருக்கு தொற்று
துபாயில் சிக்கி தவித்த 5 பெண்கள் உட்பட 178 இந்தியர்கள் மீட்கப்பட்டு, நேற்று  முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். இவர்கள் தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Tags : Tiruvika Nagar , Trivik Nagar Zone, Corona, Public
× RELATED வடசென்னையில் அதிநவீனமாகும் 6 பஸ்...