×

கொரோனாவால் வறுமை: டி.வி.நடிகர் தற்கொலை

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மன்மீத் க்ரேவல் வயது 32. இவர் மும்மைபயில் தங்கி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். குறிப்பாக சீக்கிய இளைஞர் வேடத்தில் அதிகமாக நடித்துள்ளார். ஆதத் சே மஜ்பூர் மற்றும் குல்தீபக்  ஆகியவை அவர் நடித்த முக்கிய தொடர்கள்.
மன்மீத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மன்மீத் க்ரேவல் படுக்கையறைக்கு சென்று  மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார். சத்தம் கேட்டு விழித்த அவரது மனைவி கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி உள்ளார்.

கொஞ்சம் உயிர் இருக்கும்போது அவரை தூக்கி பிடித்துக் கொண்டு உதவி கோரியுள்ளார். ஆனால் கொரோனா பயத்தின் காரணமாக யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர்  சிலர் உதவிக்கு வந்து மன்மீத்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு  சென்றார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மன்மீத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.போலீஸ் விசாரணையில் ரவீந்திர கவுர் கூறியதாவது, மன்மீத் நடித்த தொடர்கள், வெப் தொடர்கள், விளம்பர படங்கள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்தார்.

வீட்டு வாடகை ரூ. 8 ஆயிரத்தைகூட கொடுக்க முடியவில்லை. கடன்காரர்கள் வேறு கடனை கேட்டு தொல்லை கொடுத்தார்கள்.  நகைகளை அடகு வைத்து அந்த பணமும் தீர்ந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருந்த மன்மீத் இப்படி செய்து கொள்வார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்று கூறியுள்ளார்.

Tags : Corona ,TV Nadikar , Corona, Suicide ,T.V. Nadikar
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...