×

கொரோனா பணியில் தீவிரம்; 3 மாதங்களுக்கு பிறகு, தனது குடும்பத்தினரை சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா

திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக இறங்கிய நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு, தனது குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தார். சைலஜா டீச்சர் என்று அன்போடு அழைக்கப்படும் சுகாதாரத் துறை அமைச்சரின் அயராத பணி காரணமாக, கேரளாவில் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் திறமையாக செயல்படுத்தப்பட்டு, அங்கு நோய் இல்லாத மாநிலமாக மாற்றி உள்ளார். கடந்த 3 மாதமாக அரசு அலுவலகத்திலேயே முகாமிட்டு, சுகாதாரத்துறை ஊழியர்களை முடுக்கிவிட்டு, இரவு பகல் பாராது, கொரோனா தடுப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். சுமார் 3 மாத காலம் அவரது அயராது உழைப்பு, மாநிலம் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு, பல்வேறு தளர்வுகளை பெற்று மக்கள் சுதந்திரமாக நடமாட தொடங்கி உள்ளனர்.

இதைத்தொடர்ந்தே, கேரள சுகாதாரத்துறை அமைச்சர்  சைலஜா டீச்சர், 3 மாதங்க ளுக்கு பிறகு முதன்முறையாக தனது குடும்பத்தினரை சந்தித்தார். அவரை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவரது பேத்தி, அவரைக்கண்டதும் ஓடிச்சென்று கட்டிக்கொண்டார். அமைச்சர் சைலஜா தனது பேத்தியை தூக்கிக் கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சர் சைலஜா ஏற்கனவே கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட பெரு வெள்ளத்தின்போதும், நிஃபா வைரஸ் தாக்கத்தின்போதும் சிறப்பாக பணியாற்றி, கேரள மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளிடையேயும் பாராட்டுப் பெற்றவர். அவரது மக்கள் பணி, தலைமுறைகள் கடந்தும் பாராட்டப்படும்  என்பதில் வியப்பேதும் இல்லை.

Tags : Sailaja ,Kerala , Corona, Family, Kerala Health Minister, Sailaja
× RELATED கடன் தொல்லையால் தொழிலதிபர்...