×

கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து மார்பிள், கிரானைட் வரத்து முடக்கம்

கோவை: கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மார்பிள்ஸ், டைல்ஸ் மற்றும் கிரானைட் சப்ளை டீலர்கள் உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர், ஜெய்பூர், ஜிகானி, கிஷன் கரா, கர்நாடக மாநிலம் மங்களூர், பெங்களூர் மற்றும் ஆந்திராவின் விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் இருந்து கிரானைட், மார்பிள், கண்ணாடி மார்பிள், டைல்ஸ் கற்கள் போன்றவை கோவைக்கு பெறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக லாரி போக்குவரத்து முடங்கியதால் கர்நாடகா, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோவைக்கு மார்பிள் டைல்ஸ் மற்றும் கிரானைட் வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

இதனால், கோவை மாவட்டத்தில் கிரானைட் டீலர்கள் மூலமாக கட்டுமான துறைக்கு தேவையான மார்பிள் மற்றும் கிரானைட் சப்ளை குறைகிறது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக, மார்பிள், கிரானைட் தேவை அதிகரித்துள்ளது. ஆனாலும், வரத்து இல்லாத காரணத்தால் கட்டுமான துறை ஸ்தம்பித்துள்ளது.ஏற்கனவே கையிருப்பில் உள்ள பொருட்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விலை உயர்ந்துள்ளது. மார்பிள் கற்களை ஏற்றி, இறக்க மற்றும் அளவுகளுக்கு ஏற்ப துண்டிக்க, பாலிஷ் போட கூலித்தொழிலாளர்கள் இல்லாத நிலையும் உள்ளது. ஊரடங்கு முடிந்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினால் மட்டுமே இத்தொழில் பழைய நிலைமைக்கு திரும்பும் என்கிறார்கள் இத்துறையினர்.

Tags : Rajasthan Karnataka ,Karnataka ,Rajasthan , Marble,Granite Freeze, Karnataka ,Rajasthan
× RELATED மீனாட்சி கோயில் சித்திரை வீதியில்...