×

மேட்டுப்பாளையம் அருகே சினிமா இயக்குனர் விபத்தில் பலி

மேட்டுப்பாளையம்:   கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத்  (35). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் பிரபல  இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 4ஜி என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.
கொரோனா ஊரடங்கால்  படப்பிடிப்புகள் ரத்தான சூழலில், அருண் பிரகாஷ் தனது சொந்த ஊரான  அன்னூருக்கு கடந்த மாதம் வந்தார். நேற்று காலை தனது பைக்கில் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது  நண்பரை பார்க்க சென்றார்.

நண்பரை சந்தித்துவிட்டு மீண்டும் அன்னூருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய காய்கறி சந்தை அருகே வந்தபோது எதிரே வந்த  டிப்பர் லாரியும், பைக்கும் மோதின. இதில் பலத்த காயமடைந்த அருண் பிரசாத் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


Tags : Film director ,crash ,Mettupalayam Mettupalayam , Mettupalayam, cinema director, killed in accident
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது