×

கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம்: ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பையே மட்டுமே கேட்கிறோம்...சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து 4 நாட்களாக 3-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னையில்,  செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவை பின்வருமாறு..

* நாட்டிலேயே சென்னையில் தான் அதிக அளவிலான பரிசோதனை நடக்கிறது.
* சென்னையில் மட்டும் 50 லட்சம் மாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.
* அச்சப்பட வேண்டாம்; ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பையே கேட்கிறோம்.
சென்னை மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு எதிர்பார்க்கிறோம்.
* 70-75% பேருக்கு பிறரை சந்திப்பதன் மூலமே நோய் பரவுகிறது.

* 80% பேருக்கு அறிகுறி இல்லாமல்தான் கொரோனா பாதிப்பு.
 * நாளுக்கு நாள் டிஸ்சார்ஜ் அதிகரித்து வருவது நல்ல செய்தி.
* குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
* குடிசை பகுதிகளில் முகக்கவசம் விநியோகிக்கப்படுகிறது.

* 2000 குடியிருப்புகள் நோய் பாதிப்புக்கான இடங்களாக கண்டறிந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.  
* ராயபுரத்தில் தொற்று அதிகம் பாதித்த இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
* ராயபுரத்தில் தொற்று அதிகம் பாதித்த 10 இடங்களில் உள்ளவர்களை சமுதாயக் கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
* சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதிவாரியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு.
* சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம்.


Tags : Radhakrishnan , Corona Impact Solutions: Don't Be Afraid; We ask for creative cooperation ... Interview with Special Officer Radhakrishnan
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...