×

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்தை வழங்க சிஎம்ஆர் ஒப்புதல்

சென்னை:  கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு 4 முறையில் சிகிச்சை வழங்க ஐசிஎம்ஆர் பல்வேறு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இதன்படி ஆன்டி-வைரல் மருந்துகள், ஹைட்ராக்ஸி குளோரைடு மருந்துகள், பிளாஸ்மா சிகிச்சை மற்றும் ரெம்டிசிவிர் முறையில் சிகிச்சை வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது.   இதில் பிளாஸ்மா சிகிச்சையை சோதனை முறையில் செயல்படுத்த சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று ரெம்டிசிவிர் முறையில் சிகிச்சை அளிக்க ஐசிஎம்ஆர் தமிழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சோதனை முறையில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்  விரைவில் இதற்கான சிகிச்சை துவங்க உள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை குழுவிற்கு 10 பேர் வீதம் பிரித்து பரிசோதனை முறையில் இந்த நான்கு சிகிச்சைகள் அவர்களுக்கு வழங்கப்படும். இதில் எந்த குழுவைச் சேர்ந்தவர்கள் விரைவில் குணமடைவதை பொறுத்து அந்த சிகிச்சை முறையை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவின் கிலியட் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் ரெம்டிசிவிர் மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவிற்கு முதல் கட்டமாக ஆயிரம் மருந்துகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெம்டிசிவிர் என்பது என்ன?
ரெம்டிசிவிர் என்பது ஒரு வகை தடுப்பு மருந்து . இந்த மருந்து ஏற்கனவே சார்ஸ் வைரஸ் தாக்குதல் போது சோதனை முறையில் பயன்படுத்தபட்டது. கொரோனா வைரஸ், சார்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது என்பதால் இப்போது இதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த மருந்தை பயன்படுத்த அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona Patients , orona Patients, Remedicavir Drug, ICMR
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தப்பூர்...